என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மெட்ரோ ரெயில் நிலையம்"
சென்னை:
சென்னையில் வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் - ஆலந்தூர் ஆகிய 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் சுமார் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. ரூ.100 கட்டணத்துடன் கூடிய அட்டையில் ரூ.50 கூடு தலாக செலுத்தி நாள் முழுவதும் செல்லும் வகையில் சுற்றுலா அட்டை வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திய பிறகு ரூ.50 திருப்பி அளிக்கப்படுகிறது. பயணிகள் பயணம் செய் வதற்கு ஏற்ப 6 வகையான கார்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கியவுடன் பஸ் ஏறி செல்வதற்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே பயணிகளின் வசதி கருதி மெட்ரோ ரெயில் நிலையங்களின் அருகில் பஸ் நிறுத்தத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளில் மெட்ரோ ரெயில் நிறுவன மும், மாநகர போக்குவரத்து கழகமும் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் சில இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்களின் அருகில் மாநகர பஸ் நிறுத் தங்கள் உள்ளன. அசோக் பில்லர், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்களை ஒட்டியே மாநகர பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதனால் இந்த இடங்களில் பயணிகள் மெட்ரோ ரெயிலில் இருந்து இறங்கி பஸ்களில் பயணிப்பதும், பஸ் பயணிகள் மெட்ரோ ரெயிலில் செல்வதும் சுலபமாக உள்ளது.
ஆனால் சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும், பஸ் நிறுத்தத்துக்கும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி இருக்கிறது. அதேபோல் செனாய்நகர், வடபழனி மற்றும் அரும்பாக்கம் ஆகிய இடங்களிலும் மெட்ரோ ரெயில் நிலையமும், பஸ் நிலையமும் மிக தொலைவில் உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் பயணிகள் சிரமத்தை சந்திப்பதால் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதை தவிர்க்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே அனைத்து மெட்ரோ ரெயில் நிலை யங்கள் அருகிலும் பஸ் நிறுத்தங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் பஸ் நிறுத்தங் களை அமைக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டு வருகிறது.
எல்.ஐ.சி., தேனாம் பேட்டை, நந்தனம், ராணுவ குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்களை ஒட்டி பஸ் நிறுத்தங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
வேலை காரணமாக தினமும் வந்து செல்லும் பயணிகளுக்கு இது பயனுள் ளதாக இருக்கும். அதன் மூலம் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கையும் உயரும் என்று கருதப்படுகிறது.
சென்னை:
தற்போது கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மேலும் அண்ணாசாலை டி.எம்.எஸ்.சில் இருந்து சென்ட்ரல் வழியாக வண்ணாரப்பேட்டைக்கு சுரங்கப் பாதை வழியாக மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.
அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. எனவே இன்னும் சில வாரங்களில் ரெயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.
அண்ணா சாலையில் அரசினர் தோட்டத்தில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அது ஓமந்தூரார் எஸ்டேட் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அருகே அமைந்துள்ளது.
பொதுவாக இது பாதசாரிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. அதனால் இங்கு பொதுமக்கள் ரோட்டை கடக்க வசதியாக சுரங்க பாதை உள்ளது.
எனவே அரசினர் தோட்ட மெட்ரோ ரெயில் நிலையத்தை இந்த சுரங்க பாதையுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மெட்ரோ ரெயில் நிலையம் வரும் பயணிகள் சுரங்கப் பாதை வழியாக வெளியேறி மிக எளிதாக பிளாட்பாரத்தை வந்து அடைய முடியும். அதே நேரத்தில் சுரங்கப் பாதை வழியாக மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்று வரவும் வசதியாக இருக்கும்.
அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #MetroTrain
சென்னை சென்டிரல் - விமானநிலையம், விமானநிலையம் - ஏ.ஜி-டி.எம்.எஸ்., ஆலந்தூர்-பரங்கிமலை உள்ளிட்ட பாதைகளில் 26 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழியாக ரெயில் போக்குவரத்து நடந்துவருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 60 ஆயிரம் பேர் இதில் பயணித்து வருகின்றனர்.
அதிக பயணிகள் வரும் ரெயில் நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 3 நுழைவுவாயில்கள் செயல்பட்டு வருகிறது. இப்போது சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் வகையில் புதிதாக 4-வது நுழைவுவாயில் நேற்று திறக்கப்பட்டது.
அதேபோல் நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 2 நுழைவுவாயில்கள் இருந்தது. தற்போது தேவர் சிலை பகுதியில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் வகையில் 3-வது நுழைவுவாயில் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு 26 பயணிகள் செல்லும் வகையில் 2 லிப்டுகளும் பொருத்தப்பட்டு உள்ளன.
தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 2 நுழைவுவாயில்கள் இருந்தன. தற்போது எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சிக்னல் அருகில் இருந்து வருபவர்களுக்காக 3-வது நுழைவுவாயில் நேற்று திறக்கப்பட்டது. இந்த நுழைவுவாயில்கள் மூலம் பயணிகள் எளிதாக மெட்ரோ ரெயில் நிலையத்தை அடையமுடியும்.
இந்த தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்ட்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயிலில் பயணிகள் பயணித்து வருகிறார்கள்.
மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தங்கள் வீடுகளுக்கு பயணிகள் எளிதாக செல்ல ரெயில் நிலைய வாசலில் ஷேர் ஆட்டோ, கார் வசதி செய்யப்பட்டது.
குறிப்பிட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் பரிட்சாத்த முறையில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்திற்கு இந்த சேவை அளிக்கப்பட்டு வருகிறது. ஷேர் ஆட்டோ வசதி அசோக் நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, பரங்கிமலை, திருமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் உள்ளது.
இதன் மூலம் ரெயில் நிலையத்தில் இருந்து வீடுகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்று பயணிகள் வரவேற்பு தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையே மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்ல கால் டாக்சியை போனில் புக் செய்யும் வசதியை அளிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
சாலிகிராமத்தில் இருக்கும் பயணி வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்று விரும்பினால் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு காரை புக் செய்யலாம். உடனே கார் பயணி இருக்கும் பகுதிக்கு சென்று மெட்ரோ நிலையத்திற்கு அழைத்து வரும்.
அதே போல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லவும் காரை புக் செய்து கொள்ளலாம்.
இந்த சேவை படிப்படியாக அனைத்து ரெயில் நிலையத்திற்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக பயணிகள் கூறுகையில், “வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கால் டாக்சியை புக் செய்யும் வசதி பயன் உள்ளதாக இருக்கும். ஆனால் அதற்கு பதிலாக மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கினால் எளிதாக இருக்கும். இதன் மூலம் கார் டிரைவர், பயணி எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதையும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதை விரைவில் அறிமுகபடுத்துவார்கள் என்று நம்புகிறோம்” என்றனர். #MetroTrain
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர் மற்றும் நெற்குன்றம்- விவேகானந்தர் இல்லம் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மத்திய அரசு ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஆரம்ப கட்டப்பணிகளை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் செயல்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் மாதவரம்-சிறுசேரி இடையேயான வழித்தடத்தில் புரசைவாக்கம் பகுதியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாற்றியமைக்க கோரி அங்குள்ள வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
மாதவரம்- சிறுசேரி மெட்ரோ ரெயில் பாதையில் புரசைவாக்கம் நெடுஞ்சாலையிலும், டவுட்டன் அருகிலும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதனால் புரசைவாக்கம் பகுதியில் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கருதி வியாபாரிகள் தேவையில்லாமல் கடை அடைப்பு போராட்டங்களை நடத்துகின்றனர்.
ஆனால் உண்மையில் புரசைவாக்கம் பகுதியில் ரெயில் நிலையம் அமைக்கப்படுவதால் 33 கடைகளும், 2 அடுக்குமாடி குடியிருப்புகளும் மட்டுமே பாதிக்கப்படுகின்றன.
அதேபோல் டவுட்டன் பகுதியில் ரெயில் நிலையம் அமைக்கப்படுவதால் 45 கட்டிடங்கள் மட்டும் பாதிக்கப்படுகின்றன. இந்த கட்டிடத்தில் 144 கடைகள் உள்ளன. இவற்றுக்கான முறையான இழப்பீடு வழங்கப்படும்.
மாறாக புரசைவாக்கம் மற்றும் டவுட்டன் ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களும் பயனடைவார்கள்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
சென்னை பெருநகரின் புகழை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் சென்னை வாரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கிரிட்டா நிறுவனத்துடன் இணைந்து பாரம்பரிய விளையாட்டு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்காக மெட்ரோ ரெயில் நிலையங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டு நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. ஆகஸ்டு 13-ந் தேதி வரை விளையாட்டு நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சி நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பல்லாங்குழி, பரமபதம், ஆடு புலி ஆட்டம், கட்டம் விளையாட்டு, நட்சத்திர விளையாட்டு, நாலு கட்ட தாயம், டயர் ஓட்டுவது ஆகிய பாரம்பரிய விளையாட்டுகள் நடந்தன. இதில் 75 பயணிகள் கலந்து கொண்டனர்.
இன்று (செவ்வாய்கிழமை) கிண்டி, வடபழனி மற்றும் நங்கநல்லூர் ரோடு ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் காலை 10 மணியில் இருந்து 12 மணி வரையிலும், மற்ற அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை பாரம்பரிய விளையாட்டு நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் வினிதா சித்தார்த்தா ஆகியோர் செய்து வருகின்றனர்.
சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்துவரும் பயணிகள் பூந்தமல்லி சாலையை எளிதாக கடப்பதற்காக சென்டிரல்-மெட்ரோ ரெயில் நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது.
இந்த சுரங்கப்பாதை நேற்று முதல் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த சுரங்கப்பாதையில் இரண்டு பகுதிகளிலும் 2 நகரும் படிக்கட்டுகளும், 2 படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இரண்டு பகுதிகளிலும் லிப்டுகள் 3 மாதத்தில் அமைக்கப்படும்.
இதன்மூலம் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தை அடைய 2 நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வாயில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 5 நுழைவு வாயில்களும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
பாரிமுனையில் ராஜாஅண்ணாமலை மன்றத்தில் இருந்து பிராட்வே சிக்னல் செல்லும் சாலையும், ஐகோர்ட்டு முன்பு உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையும் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்து வருவதால் தற்போது மீண்டும் இருவழி பாதையாக்கப்பட்டு உள்ளது.
டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்த உடன் அண்ணா சாலையிலும் முழுமையாக இருவழிப்பாதையில் போக்குவரத்து தொடங்கப்படும்.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ரெயில் நிலையங்களில் உள்ள பூங்காக்களுக்கும், கழிப்பறைகளுக்கும் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்